Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 14, 2020

'வேப்பிலை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'


'கொரோனாவுக்கு எதிரான, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், தினமும் வேப்பிலை சாப்பிட வேண்டும்' என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

ஆரோக்கியமான, சத்தான இயற்கை உணவு வகைகளால், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை பரிந்துரைத்துள்ள உணவு வகைகள்:

ஆரோக்கிய சத்து அதிகமுள்ள, கேழ்வரகு மற்றும் சிறுதானியங்கள் மிகுந்த உணவுடன் காய்கறிகள், பழங்கள் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். அப்போது, உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரையை மிகவும் குறைவாக எடுக்க வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பப்பாளி மற்றும் கேரட் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை, முருங்கை இலை, வெந்தயஇலை போன்றவற்றை, உணவில்சேர்த்து கொள்ள வேண்டும்

வேப்பிலை, 5 கிராம், சாறாகவோ, துவையலாகவோ, பொடியாகவோ தினமும் எடுக்கலாம். குழந்தைகளுக்கு பாதியளவு கொடுக்கலாம்

துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இயற்கைக்கு மாறான குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும்

தினமும், 3 முதல், 4 லிட்டர் அளவு வெந்நீர் அருந்த வேண்டும். இரவு, 7:30 மணிக்கு முன், இரவு உணவை உண்ண வேண்டும். அதன்பின், நீரை தவிர, வேறு உணவை எடுக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment