Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 21, 2020

செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்...


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், அடுத்த மாதம் முதல் கண்டிப்பாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சில பகுதிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் பேருந்துகள் இயங்கும் என தெரிகிறது. தமிழகத்தில் எட்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மண்டலங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. மண்டலங்களுக்கு வெளியே செல்ல விரும்புவோர் தனியார் வாகனங்களில் இ-பாஸ் பெற்றுக் கொண்டு பயணிக்க வேண்டும்.

மண்டலம் 1 : கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் 3 : விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், தேனி மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
மண்டலம் 6 : தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்.

இதில் ஏழு மற்றும் எட்டாவது மண்டலங்களை தவிர்த்து மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நடைமுறைதான். கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.

No comments:

Post a Comment