JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியிலிந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இந்த வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
இந்நிலையில், நான்காம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என அதிகாரிகள் கூறியதாவது, நான்காம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது. மெட்ரோ ரயிலுக்கு அனுமதி அளித்தாலும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக தங்களது இறுதி முடிவினை எடுத்துக்கொள்ளலாம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு தற்போதைக்கு அனுமதி அளிக்கப்படாது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது சினிமா தியேட்டர்களில் பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் உரிமையாளர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரரீதியாக எவ்வித பலனையும் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்.
சமூக, விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார, அரசியல் பொதுக்கூட்டங்கள், ஆன்மிக, கல்வி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தடை நீடிக்கும். மதுபான பார்களில் மது விற்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. நான்காம் கட்ட தளர்வில், எது எதற்கு தடை என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். மற்ற அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். இருப்பினும், மாநில அரசுகள், கூடுதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்துக்கொள்ளலாம்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment