Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 29, 2020

செப்டம்பர் 1 முதல் எது உண்டு..? எது இல்லை..? சிறப்புத் தகவல்..!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளோடு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்டமாக பல்வேறு தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில், வரும் 1 -ஆம் தேதி முதல் என்ன விதமான விஷயங்களுக்கு தடை தொடரும் என்றும், எந்த விதமான விஷயங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றை பின்வருமாறு பார்ப்போம்:-

1. காலை 8 மணி முதல், 2 மணி வரை அரசு நூலகங்கள் இயங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உள்ளே வர அனுமதி வழங்கப்படமாட்டாது.

2. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தான். வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தால் தான் பள்ளிகள் திறக்கப்படும்.

3. பூங்கா மற்றும் சுற்றுலாத்தளங்கள் திறப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.

4. தியேட்டர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், ஏசி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிப்பது குறித்து பரிசீலனை நடத்தப்படலாம்.

5. வனிக வளாக செயல்பாட்டிற்கு தற்போது அனுமதி இல்லை. ஆனால் பல கட்டுப்பாடுகளுடன் விரைவில் அனுமதிக்கப்படலாம்.

6. மாவட்டங்களுக்கு இடையே உள்ள பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இல்லை.

7. மாவட்டங்களுக்கு உள்ளேயே இயங்கும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படலாம்.

8. ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை இயங்குவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இல்லை. சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படலாம்.

9. பெரிய வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் நிச்சயம் இருக்கும்.

10. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழுஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அது ரத்தாக வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment