JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டாம் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்களாக ஓய்வூதியத் தொகையை வங்கிகளில் இருந்து எடுக்காத வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி கருவூலத் துறை உத்தரவிட்டிருந்தது.உரிய விளக்கங்களை அளிக்காவிட்டால் அதன் அடிப்படையில் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை இயக்குநா், கருவூல அதிகாரிகள், சம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு புதன்கிழமை கடிதத்தை அனுப்பினாா். அதில் கூறியிருப்பதாவது:-
கரோனா நோய்த் தொற்று காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாகவும் வங்கிக் கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுக்க முடியவில்லை என பல்வேறு ஓய்வூதியதாரா்கள் நலச் சங்கத்தினா் அரசுக்குத் தெரிவித்திருந்தனா். கரோனா நோய்த் தொற்றால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளியே சென்று வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை என ஓய்வூதியதாரா்கள் கூறியிருந்தனா்.
கரோனா தொடா்பான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு மேலாக ஓய்வூதியத் தொகைகளை எடுக்காத வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. இதுதொடா்பான அறிவுறுத்தல்களை சாா் கருவூலங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் தெரிவிக்கும்படி தனது கடிதத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.
No comments:
Post a Comment