Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 24, 2020

அசிடிட்டி பிரச்சினையால் பெரும் அவதியா?


நாம் உண்ட உணவு செரிமானமாக வயிற்றுப்பகுதியில் "HydroChloric Acid" என்ற அமிலம் சுரக்கின்றது அது அளவுக்கு அதிகமாக சுரக்கும்பொழுது அசிடிட்டி வருகின்றது.

காலை உணவு உண்ணாமல் வெரும் வயிற்றுடன் இருப்பதாலும், உண்ட உணவு சரிவர செரிமானமாகாமல் இருப்பதாலும், அதிக குடி மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவதாலும் அசிடிட்டி வருகின்றது.

அதுமட்டுமில்லாது அதிக கொழுப்பு நிறைந்த Chocolates உண்பதாலும் ,நொறுக்கு தீனிகள், கார வகை உணவுகள், வெப்பம் நிறைந்த பகுதியில் இருத்தல், இது அனைத்தயும் விட மிக முக்கியமான ஒன்று அதிக கோபம் மற்றும் கவலை படுவதாலும் அசிடிட்டி வருகின்றது.

ஆகவே அசிடிட்டி இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால், அப்போது மருந்து மாத்திரைகளின் உதவியை நாடி சார்ந்து இருக்காமல், அதற்கான இயற்கை கை வைத்தியங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை முயற்சிக்க வேண்டும்.

தற்போது அசிடிட்டிக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம்.

தினமும் துளசியை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது அதனைக் கொண்டு டீ தயாரித்து தேன் கலந்து குடிக்கலாம்.

தினமும் உணவை உட்ககொண்ட பின்னர், ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பட்டையை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி டீ போன்று தயாரித்துக் குடிக்கலாம்.

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து குடித்து வர வேண்டும். மேலும் இந்த நீரை தினமும் மூன்று முறை குடித்து வர வேண்டும்.

இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்தோ அல்லது இஞ்சியை உப்பில் தொட்டு வாயில் போட்டு மென்று வர வேண்டும். இதன் மூலம் அசிடிட்டியை குணமாக்கலாம்.

தினமும் 10-12 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். அதிலும் வெதுவெதுப்பான நீரென்றால், இன்னும் சிறந்தது.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் மோர் குடித்து வந்தால், அதில் உள்ள லாக்டிக் ஆசிட், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் மோருடன் சிறிது மிளகு மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்லது.

ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் கிராம்பு மற்றும் ஏலக்காயை சிறிது எடுத்து வந்தால், அது விரைவில் அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு தரும்.
2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்சனை நீங்கும்.

No comments:

Post a Comment