Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 16, 2020

கொசுக்களை விரட்ட சில வழிமுறைகள்


கொசுக்கள் தான் நமது பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. டெங்கு, மலேரியா போன்ற பல வீரியமான நோய்களுக்கும் இவைகள்தான் தான் காரணமாக இருக்கிறது.

கொசுக்களை ஒழிப்பதற்காக பல கம்பெனிகளின் கொசு விரட்டிகளும் மேட்களும் ஏராளமாக இருக்கின்றது. இந்த மேட்களும்,விரட்டிகளும் மேலும் பல நோய்களைக் கொண்டு வந்து வருகின்றதே தவிர கொசுக்களை விரட்டிய பாடில்லை.

ஆனால் நம்முடைய வீட்டில் உள்ள எலுமிச்சையை வைத்தே கொசுக்களை மிக எளிதாக விரட்டிவிட முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஆம், எலுமிச்சை, கிராம்பு மட்டும் போதும் உங்கள் வீட்டுக் கொசுக்களை ஓட ஓட விரட்ட.


தேங்காய் நார்கள் நம்மூர் கடைகளில் சுலபமாக கிடைக்கின்றன. அதை வாங்கி வந்து மாலை நேரங்களில் அதை எரித்து அதன் புகையை எல்லா அறைகளுக்கும் காண்பித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து பாருங்கள் ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது.

கற்பூரத்தைக் கொண்டும் கொசுக்களை விரட்டலாம். சல்பர் இருக்குமிடத்தில் ஒரு கொசு கூட இருக்காது. கற்பூரம் சல்பரினால் ஆனாது. ஆனால் கற்பூரம் சுலபமாக காற்றில் உடனே கரைந்துவிடும். கற்பூரத்தை தட்டில் வைத்து கொளுத்தி விட்டு வீடு முழுவதும் அதன் புகையைக் காட்டினாலும் கொசுக்கள் ஓடிவிடும்.

வீட்டின் ஜன்னல் பகுதிகளில் வெள்ளைப்பூண்டை நசுக்கிப் போட்டு வைத்தாலும் ஒரு கொசுக்கள் கூட உள்ளே வராது.

பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து கொசு அதிகமாக உருவாகும் இடங்களில் தெளித்துவிட வேண்டும். இதனால் கொசுக்கள் உருவாகுவதை தடுக்கலாம்.


வேப்பிலை அல்லது நொச்சி இலைகளை நெருப்பில் போட்டு வீடு முழுவதும் புகை போட்டால் கொசுக்கள் வீட்டுப்பக்கமே வராது.

அதேபோல் எலுமிச்சை,ஆரஞ்சு, சாத்துக்குடி தோலை உலர்த்தி யூக்கலிப்டஸ் இலையுடன் சேர்த்து வீட்டில் புகை போடுங்கள். இதுவும் நல்ல பலன் தரும்.

இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது தினமும் ஒரு விஷயத்தையோ வீட்டில் செய்து வர வீட்டில் கொசு பிரச்னையைத் தீர்த்தட்டுவிடலாம்.

No comments:

Post a Comment