Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 19, 2020

தனியார்பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் வழங்க மறுக்க கூடாது-அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் உத்தரவு


தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 வகுப்புகளுக்கான சேர்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பலரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு மாற்ற தனியார் பள்ளிகளில் மாற்று சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனியார்பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால், தனியார் பள்ளி நிர்வாகம் வழங்க மறுக்க கூடாது. அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment