Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 23, 2020

தினம் ஒரு கப் காரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. 

காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா.
தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.

வைட்டமின் B அதிகம் உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.

நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.

குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.

இதயத் துடிப்பைச் சீராக்கும். 

இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.

மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.

இரத்தப் புற்றுக்கு தினமும் காரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தலை சுற்று, மயக்கம் வராமல் காக்கும். வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.

நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும்.

சூதகக் கட்டு ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும். குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.

காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.

காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறையும்

முடி கொட்டாது நீளமாக வளரும்.

No comments:

Post a Comment