Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 30, 2020

முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகள்... மீண்டும் மத்திய அரசு அறிமுகம்

மீண்டும் இரண்டு ஆண்டு முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கு மத்திய அரசு புத்துயிர் அளித்துள்ளது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், தனது அனைத்துப் பட்டயப் படிப்புகளையும் பட்டப் படிப்புகளாக இந்திய மருத்துவ கவுன்சில் மாற்றியது.

எட்டு துறைகளின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பட்டயப் படிப்புகளை நடத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற குறைந்தபட்சம் நூறு படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்.

பட்டயப் படிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே அந்தப் பற்றாக்குறையைப் பூர்த்திசெய்ய மீண்டும் முதுநிலை மருத்துவப் பட்டயப்படிப்புகளை அறிமுகம் செய்ய தேசிய தேர்வுகள் வாரியத்தை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

தற்போது மயக்கவியல், மகப்பேறியல், குழந்தை மருத்துவம், குடும்ப மருத்துவம், கண் மருத்துவம், கதிரியக்கவியல், காது மூக்கு தொண்டை மருத்துவம், காசநோய் மர்றும் இதய நோய் ஆகிய எட்டு துறைகளின்கீழ் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிதி ஆயோக், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுடன் நடத்திய தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய மருத்துவப் பட்டயப்படிப்புகளை தேசிய தேர்வு வாரியம் வகுத்துள்ளது. எம்பிபிஎஸ் முடித்து நீட் முதுநிலை தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் இந்தப் பட்டயப்படிப்புகளில் சேரமுடியும்.

No comments:

Post a Comment