Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 22, 2020

"கொரோனா பரவல் குறைந்த பிறகே, பள்ளி - கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்" - அமைச்சர் செங்கோட்டையன்


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11 ஆம் வகுப்புக்கான பாடம் இன்னும் எடுக்கப்படவில்லை.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 ஆம் வகுப்பும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்றும்
கொரோனா தாக்கம் குறைந்த பிறகு அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார்” என்றும் பதிலளித்துள்ளார்

No comments:

Post a Comment