JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சத்தான ஜூஸ் ஒன்றை எப்படி தயாரிப்பது என்பதை இதில் காண்போம்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வெயில், மழை என மாறிமாறி வரும் சூழலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காய்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட ஆரம்பிக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். காய்கறிகள் மற்றும் பழங்கள் பயன்படுத்தி தயாரிக்கும் சத்தான ஜூஸ் ஒன்றை இங்கே காண்போம்.
தேவையான பொருட்கள்:
அரை ஆப்பிள்
அரை ஆரஞ்சு
சிறிய கேரட்- 1
வெள்ளரி
இஞ்சி
எலுமிச்சை
தண்ணீர்

செய்முறை:
ஆப்பிளை சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் ஆரஞ்சை தோலுரித்து கொள்ளவும்.
அதன்பிறகு நாம் வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதல் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சுவையான மற்றும் சத்தான இந்த ஜூஸை குடும்பத்தினருடன் குடித்து மகிழ்ச்சியுடன் இருங்கள்.
மருத்துவ குணங்கள்:
காய்கறி மற்றும் பழங்களில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் என பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு கேரட், ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவை அதிக நன்மை தரும்.
தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் பண்பு இதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வைட்டமின் சி பயன்படுகிறது.
No comments:
Post a Comment