Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 29, 2020

உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிலுவை: வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு*_

எஸ்.சி., ~ எஸ்.டி., கல்வி உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*

திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.*

*இது, மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.*

*சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களில், பலருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.*

*இதையடுத்து, ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:*

*கடந்த, 2018 ~ 19, 2019 ~ 20 கல்வியாண்டில், 9 முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கு தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ளது.*

*அந்த மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.*

*இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*

No comments:

Post a Comment