Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 31, 2020

ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது - பெயர்ச்சி




அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2020 ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சி செப்டம்பர் 1 நிகழவுள்ளது.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள் எனும் அடைமொழியோடு வழங்கப்பெறும் ராகு - கேது, மனிதர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தோஷங்களையும் பலன்களையும் தந்து பாவச்சுமைகளை அகற்றும் புண்ணிய மூர்த்திகள் ஆவர்.

ஒருவர் ஜாதகத்தில் அல்லது அம்சத்தில் ராகு-கேது நல்ல இடங்களில் இருந்தால் ராகு அளப்பரிய செல்வத்தை அளிப்பார். அதேபோல் கேது நல்ல அறிவினையும் சிறந்த செயலில் ஈடுபடும்படி வழிகாட்டுவார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சாயா கிரகங்கள் எனப்படும் ராகுவும் கேதுவும் சகோதரர்களாவர். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. அது என்னவென்றால், இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

ஜோதிடத்தில் இரண்டு பஞ்சாங்க முறைகள் பின்பற்றப்படுகிறது. இதில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி ஆண்டு தமிழ் மாதப்படி ஆவணி மாதம் 16ம் தேதியும், ஆங்கில மாதப்படி செப்டம்பர் 01, 2020 செவ்வாய்க்கிழமை, மதியம் 2.16க்கு (நாழிகை: 20.24) தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

அதுபோன்று, கேது பகவான் தனுசு ராசி மூலம் 1-ம் பாதத்திலிருந்து, விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23, 2020 புதன்கிழமை அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.

இந்தாண்டு பெயர்ச்சியாகவிருக்கும் ராகு-கேதுவால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலாபலன்களை பெறப்போகிறார்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாம்: 12 ராசிகளுக்குமான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2020

ராகு-கேது தோஷம் நீங்கும் கோயில்கள்

காளிதேவியை ராகு காலத்தில் வழிபட ராகுதோஷம் நீங்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாடு மிகவும் விசேஷம். கேதுவின் பிடியிலிருந்து விடுபட, பிரம்ம தேவனை வழிபடலாம். பிரம்மாவுக்கு என்று தனி சந்நிதி உள்ள கோயில்கள் சில இருக்கின்றன.

திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோயில், காஞ்சி, பாண்டிக் கொடுமுடி, குடந்தை, திருப்பட்டூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள பிரம்மனை வழிபட்டால் கேது தோஷங்கள் நீங்கும். சிவன் கோயில்களில் கர்ப்ப கிரகத்தின் வெளிப்புற மாடத்தில் இருக்கும் பிரம்மனையும் வழிபடலாம்.

குடந்தை நாகேஸ்வரம் கோயிலில் நாகராஜாவாக அருள்புரியும் ராகுவிற்கு ராகுகாலத்தில் பால் அபிஷேகம் செய்யும்போது அந்த பாலானது நீலநிறமாக மாறிவிடும். ராகு தோஷ நிவர்த்திக்கு சிறந்த தலமாக விளங்குகிறது.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஊரகம் உலகளந்த பெருமாளைத் தரிசனம் செய்து பலன் பெறலாம். கபிஸ்தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசிப்பதும் நல்லது.

ராகுவும் கேதுவும் சேர்ந்து அருள்புரியும் திருத்தலம்

காளஹஸ்தி திருத்தலம் - பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாகும். தட்சிண கைலாசம் என்ற பெருமைக்குரியது. இங்கு அருள்பாலிக்கும் காளத்திநாதரை வழிபட்டு, அங்கு வழக்கத்திலிருக்கும் பரிகாரங்களைச் செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்!

காரைக்காலிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் திருப்பாம்பரம் என்னும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடுபவர்கள் சகல தோஷங்களும் நீங்கி சுகம் பெறுவர். இக்கோயிலிலுள்ள நாகராஜரை அர்ச்சித்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும்.

நன்னிலத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீ வாஞ்சியம், திருவகீந்திபுரம் திருத்தலத்தில் உள்ள ஆதிசேஷனை வழிபட ராகு- கேது தோஷங்கள் விலகும்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனின் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை வழிபட, ராகு- கேது தோஷம் அகலும்.

No comments:

Post a Comment