Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 2, 2020

ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும்: அமைச்சர் அன்பழகன்


சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விரிவான தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார். இறுதி ஆண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும் B.Arch படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் தகவல்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம் என அறிவித்தார்.

மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வை தவிர மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரியர் எழுத இருந்த மாணவர்களையும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment