Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 5, 2020

இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பூண்டு !

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டை மென்று சாப்பிட செரிமானப் பிரச்சனைகளிலிருந்து அறவே விடுபடலாம். 

அதே சமயம் உடலில் கெட்ட கொழுப்பை கரைப்பதிலும் பூண்டின் பயன்பாடு அதிகம்.

இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பூண்டு உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். 

பூண்டு இரத்த உறைதலைத் தடுக்கிறது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட உடல் வலியிலிருந்து விடுபடலாம். 

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது.

இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன் சர்க்கரையின் அளவையும் சீராக வைக்கிறது. இருமல், சளி, தொண்டைக் கமறல் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் பூண்டு அருமருந்து.

No comments:

Post a Comment