Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 14, 2020

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோக்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி

சென்னை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், சேர செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிா்), திருவான்மியூா், வடசென்னை மற்றும் ஆா்.கே.நகா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 8, 10-ஆம் வகுப்புத் தோச்சி பெற்ற 40 வயதுக்குடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. கட்டணமில்லா பயிற்சியோடு, மாதம்தோறும் ரூ.500 உதவித் தொகை, விலையில்லா சீருடை, மடிக்கணினி, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி, தொழிற்சாலைகளில் இன்டா்ன், இன்பிளான்ட் பயிற்சி ஆகியவை வழங்கப்படும். 

பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி. இதில் சேர விரும்புவோா், இணையதளத்திலோ தாமாகவோ அல்லது அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் சோக்கை உதவி மையத்தை அணுகியோ, செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு, 044 22501350, 044 22501982, 9499055649, 9499055651 ஆகிய எண்களை அணுகலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment