Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 17, 2020

பள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட நூல் விநியோகம், விலை இல்லா பொருட்கள் வழங்குதல், மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் விநியோகம் உள்ளிட்ட பணிகளின்போது தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு குறித்து அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டு நெறி முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிகளின் நுழைவாயில்களில் சானிடைசர் வைத்து, உள்ளே நுழையும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment