Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 5, 2020

பள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறைத் தரப்பில் சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளையும் மீண்டும் திறப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். 

ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள்

கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நிலையில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வழியில் வகுப்பு

கல்வி ஆண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க சாத்தியமில்லாத சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் முதல் பள்ளி திறப்பு?

இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள்

மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய தளர்வாக பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளையும் விரைவில் திறக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி திறப்பு தேதி

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் எப்போது திறப்பது என்பது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் பங்கேற்றனர்.

பினராயி விஜயன் தகவல்

இந்தக் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறந்தால் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை பள்ளிகளைத் திறக்க முடியாது.

ஜனவரி முதல் பள்ளிகள் திறப்பு

எனவே, 2021 ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனைத்து அரசு பள்ளிகளையும் திறப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும். கொரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என பேசியுள்ளார்.

தமிழகத்தில் எப்போது திறக்கப்படும்?

கொரோனா தொற்றினால் கேரளாவைவிடத் தமிழ்நாடு தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் பதில்

இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தற்போது அது குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

1 comment:

  1. எந்த வருடமும் பள்ளிக்கூடம் திறக்க வேண்டாம்.நாசமா போகட்டும்

    ReplyDelete