Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 9, 2020

உடல் உபாதைகளுக்கு தீர்வாக அமையும் கறிவேப்பிலை

தலைமுடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை நல்ல பலனை கொடுக்கும் என்பது பலருக்கும் தெரியும். இதுமட்டுமல்லாமல் வேறு சில நன்மைகளும் உண்டு.

குமட்டல்:

ஆறு கறிவேப்பிலையை எடுத்து கழுவி உலர வைக்கவும். இதனை அரை டீஸ்பூன் நெய்யுடன் வறுத்தெடுக்கவும். இதனை குளிர வைத்து சாப்பிட்டால் குமட்டல் தொந்தரவு சரியாகும்.

வாய் துர்நாற்றம்:

கறிவேப்பிலையை ஐந்து நிமிடங்கள் மென்று, அதன்பிறகு தண்ணீர் குடிக்கவும். இதனால் வாய் துர்நாற்றம் சரியாகும்.

வயிற்றுப்போக்கு:

சுமார் 30 கறிவேப்பிலையை கழுவி அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். இதனை மோருடன் கலந்து குடிக்கவும். இதனால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலை சட்னி செய்து சாப்பிடலாம். இதனை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

வாய்ப்புண்:

கறிவேப்பிலை தூளை தேனுடன் கலந்து கொள்ளவும். இதனை வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளவும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர வாய்ப்புண் சரியாகும்.

No comments:

Post a Comment