Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 4, 2020

எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் - முருங்கை




நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.

இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.

முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.

1 comment:

  1. We want send different dishes videos in thamizhkadal. Pl send details

    ReplyDelete