Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 12, 2020

ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை சொல்லாதீங்க

பெண் குழந்தைகள் தான் சென்சிட்டிவ். அவர்களிடம் எதையாவது சொல்லி விட்டால் மனம் உடைந்து அழுது விடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. 

ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிடிவ் தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள்.

சிறு குழந்தையில் ஆரம்பித்து 10 வயது ஆகிவிட்ட மகன் சேட்டையில் ஈடுபட்டால், பெற்றோர் சொல்லும் வார்த்தை இது. இந்த வயதில் ”பி ய மேன்" என்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இப்படி சொல்லியே தங்களது குழந்தை பருவத்தில் பாதியை இழந்து வலுக்கட்டாயமாக மனதளவில் வளர்கிறார்கள்.

நீ ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற? உன் ஃப்ரெண்ட்ஸ பாரு.. சூப்பரா விளையாடுறாங்க’ என்று நச்சரிக்காதீர்கள். அது அவர்களின் விருப்பம். நீங்கள் ஓயாமல் சொல்லும் போது ”ஓ பையன்னா கண்டிப்பா விளையாடனும் போல, அப்போ என்கிட்ட ஏதோ குறை இருக்கோ” என்று தனக்குள் அவர்கள் குழம்பிப்போக வைக்காதீர்கள்.

ஏண்டா… எப்ப பார்த்தாலும் அம்மா முந்தானையே புடுச்சிகிட்டு சுத்துற. நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்’ என்று சொற்களை தயவு செய்து பிரயோகிக்காதீரக்ள். 

மொத்ததில் உங்கள் பிள்ளைகள் மனதில் ஆறாத வடுவை, ரணத்தை, குற்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்தி விடாதீர்கள். அதை எதைக் கொண்டு அழிக்க முடியாது,

No comments:

Post a Comment