Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 15, 2020

“தற்காலிக பேராசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்தும் திட்டம் இல்லை”

மத்திய பல்கலைக்கழகங்களில் தற்காலிகமாக பணியாற்றும் பேராசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவரும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நிரந்தரமாக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்று மக்களவை எம்.பி. கணேஷ் சிங் எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தற்காலிகப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நிரந்தரமாக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,210 பேராசிரியர் பணியிடங்களும், 12,437 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ளன என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 196 பேராசிரியர் பணியிடங்களும், 1,090 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும், 3 மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்களில் 52 பேராசிரியர் பணியிடங்களும், 116 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பணியிடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நிரப்பப்படுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் OBC பிரிவில் 775 பேராசிரியர்களும், SC பிரிவில் 497 பேராசிரியர்களும், ST பிரிவில் 200 பேராசிரியர்களும் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

அதே போல், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் OBC பிரிவில் 517 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும், SC பிரிவில் 303 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும், ST பிரிவில் 167 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். மத்திய பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அந்தஸ்து பெற்று இயங்குபவை என்று சுட்டிக்காட்டிய ரமேஷ் பொக்ரியால், UGC விதிகளைப் பின்பற்றியே பணியிடங்கள் நிரப்பபடுவதாகவும், தற்காலிகமாக பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்யும் திட்டம் அரசு விதிகளில் இல்லை என்றும் தெளிவு படுத்தி உள்ளார்.

1 comment: