Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 10, 2020

TET 2013 தேர்ச்சி ஆசிரியர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம் - முதல்வர் !

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறி இருப்பதாவது: 

அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். மேலும் அவர் கூறி இருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 

வானூர் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு துவங்கப்படும் மாணவர் சேர்க்கையும் இந்தாண்டே நடத்தப்படும்.

 ரூ.28 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றும் பணி துவங்கப்படும். நீட் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக்அரசின் நிலைப்பாடு. 

நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டோம். அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார் .

அரியர் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அரியர் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே யுஜிசி விதிமுறைப் படிதான் நடப்போம் என தெளிவாக கூறி விட்டோம். 

பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும்.

கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 

2013 -ல் ஆசிரியர்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment