Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 19, 2020

10, 11, 12க்கு பொதுத்தேர்வு உண்டா? டிசம்பர் மாத இறுதியில் முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நஞ்சகவுண்டன் பாளையத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார். 

இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்கும்.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் பட்டய கணக்கர் (ஆடிட்டர்) பயிற்சி தொடங்க உள்ள நிலையில், அதற்கான விண்ணப்பம் டிசம்பர் இறுதிவரை பெறப்படும். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment