JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதலாவதாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் 20ம் தேதி வரை வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 21, 22ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சலிங் நடந்தது. அனைத்து பிரிவினருக்கான கவுன்சலிங் 23ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அழைப்புக் கடிதங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகி 25ம் தேதி கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் வர முடியாமல் போகும் என்பதால், புயல் கரையை கடந்தபிறகு கவுன்சலிங் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
இதையடுத்து, 30ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை மீண்டும் கவுன்சலிங் நடக்கும் என தற்போது அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவியருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 30ம் தேதி 850 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 12ம் தேதி வரை நடக்கும் கவுன்சலிங்கில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், விபரங்களை, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment