Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 29, 2020

இந்திய விமான துறையில் 368 காலிப்பணியிடங்கள்

இந்திய விமான நிலையத்தில் இருந்து வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பொறியியல் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வேலை:

இன்றைய உலகில் நன்றாக படித்திருந்தாலும் அதற்கு தகுந்தாற் போல வேலை அமைவது குதிரை கொம்பு தான். மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கடினமாக உழைத்தால் தான் கிடைக்கும். அப்படியாக நிலை இருக்க தற்போது இந்திய விமான துறையில் இருந்து வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய விமான துறையில் தற்போது மொத்தமாக 368 ஜூனியர் எக்ஸிகியூடிவ் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொறியியல் துறையில் பைபர், மெக்கானிக்ஸ், ஆட்டோமொபைல் பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:

அதே போல் கணிதம், இயற்பியல் படித்த பி.எஸ்சி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் உங்கள் வயது 30/11/2020 தேதிப்படி 27 வயதிற்கு மேலாக இருக்க கூடாது. இந்த பணிகளுக்கு குறைந்தபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் அதிகபட்சமாக 1 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் எழுத்து தேர்வு, குரல் சோதனை தேர்வு, நேர்முக தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறை மூலமாக தேர்வர்கள் தேர்ந்தெடுக்கபட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப கட்டம் 1000 ரூபாய் என்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்கள் 170 செலுத்த வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பயில்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பினை பற்றி மேலும் தகவல்களை அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf இந்த லிங்க் மூலமாக தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment