Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 5, 2020

குழந்தைகளுக்கான ‘ரீடர்ஸ் டூ லீடர்ஸ்’ எனும் ஆன்லைன் வாசிப்பு பட்டறை- 5 முதல் 8 வயது குழந்தைகள் பங்கேற்கலாம்!

‘மை சாப்டர் ஒன்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து குழந்தைகளுக்கான ‘ரீடர்ஸ் டூ லீடர்ஸ்’எனும் ஆன்லைன் வாசிப்பு பட்டறையை நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி வரும் 21, 22 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘மை சாப்டர் ஒன்’, ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் இணைந்து, குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் நோக்கிலும், குழந்தைகளின் தனித்திறன்கள் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க புத்தக வாசிப்பின் பக்கமாய் குழந்தைகளின் கவனத்தைச் செலுத்தும் வகையிலும் இந்த 2 நாட்கள் ஆன்லைன் பட்டறை நடத்தப்படவுள்ளது. இதில் 5 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.

குழந்தைகளின் திறன்கள்

இந்தப் பட்டறையில் உலகெங்கும் குழந்தைகளிடம் வாசிப்பை முதன்மையாக வளர்க்கும் செயல்பாடுகளும், அதன் வழியேகுழந்தைகளிடம் மறைந்திருக்கும் பல்வகை திறனைக் கண்டறிவதும், வாசிப்பின் மூலமாக அவர்களிடமிருக்கும் கவிதை, கதைஎழுதும் ஆற்றலை மேம்படுத்துவதும், வாழ்க்கையைப் பற்றி புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்கவும் கற்றுத் தரப்படும்.

மேலும், குழந்தைகள் சுயமாகச் சிந்தித்து கவிதை எழுதுவது, வாசிப்பு உத்திகளை விளக்குவது, படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ குணங்கள் ஆகியவற்றின் அடிப்படைகளைப் பற்றி அறிந்துகொள்ள இப்பட்டறை வாய்ப்பளிக்கும்.

பங்கேற்பு கட்டணம் ரூ.353/-

இந்தப் பட்டறையில் சமூக மற்றும் கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவமிக்க பலர் பயிற்சியளிக்கவுள்ளனர்.

இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.353/-. பங்கேற்க விரும்புபவர்கள் https://rb.gy/glwbfr எனும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment