JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வீடு வாடகை கேட்டு வருபவர்களிடம் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையை வாங்கி சரிபார்த்த பின்னரே வீடு வாடகைக்கு விட வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில கொள்ளை கும்பல் ஒன்று, போலி தங்க பிஸ்கட் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், சூலூர் கருமத்தம்பட்டி , சுல்தான்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு வீடு வாடகைக்கு தரவேண்டாம். வீடு வாடகை கேட்டு வருபவர்கள் கொள்ளை கும்பல் அல்லது வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவரகளாக இருக்கலாம்.
எனவே, இனிமேல் வீடு வாடகை கேட்டு வருவோரிடம் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையை வாங்கி சரிபார்த்த பின்னர் வீடு வாடகைக்கு விடவேண்டும்.
சந்தேகம்படும்படியான நபர்கள், ஏமாற்று வேலை செய்பவர்கள் குறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 100 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
மேலும், இப்பகுதியில் குடியிருப்பவர்கள் வெளியூர் அல்லது நீண்டநாள் பயணம் செய்வதாக இருந்தால்.அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
No comments:
Post a Comment