Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 7, 2020

யு.பி.எஸ்.சி., பிரதான தேர்வு அட்டவணை வெளியீடு

யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக். 4ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் கடந்த 24ல் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பிரதான தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது.

யு.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு வரும் ஜன. 8ல் துவங்கி 17ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடக்கும்.முதல் நாள் மட்டும் ஒரு 'ஷிப்ட்'டிலும் இதர நாட்களில் இரண்டு 'ஷிப்ட்'டுகளில் தேர்வு நடக்கும். 

முதல் ஷிப்ட் தேர்வு காலை 9:00 முதல் நண்பகல் 12:00 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் தேர்வு மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரையும் நடக்கும்.கட்டுரைக்கான முதல் தாள் தேர்வு ஜன. 8ல் முதல் ஷிப்ட்டில் நடக்கும். 'ஜெனரல் ஸ்டடீஸ்'க்கான இரண்டாம் தாளின் நான்கு பிரிவு தேர்வுகளும் ஜன. 9 மற்றும் 10ம்தேதி இரண்டு ஷிப்ட்டுகளிலும் தொடர்ந்து நடக்கும். இந்திய மொழி மற்றும் ஆங்கிலம் தொடர்பான முதல் தாள்தேர்வு ஜன. 16ம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளில் நடக்கும். விருப்பப் பாடத்திற்கான 1 மற்றும் 2ம் தாள்களுக்கான தேர்வு ஜனவரி 17ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment