Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 7, 2020

வேர்க்கடலை தரும் நன்மைகள்

1. அதிக அளவு புரதச்சத்து

மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு பபுரதச்சத்து உள்ளது. இது உங்கள் உடல், தசை மற்றும் முடியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது.

2. சக்தி அளிக்க கூடியது

வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினெரல்ஸ் அதிகம் உள்ளது.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும்.

3. கொலெஸ்ட்ராலினை குறைக்க உதவும்

வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.

4. வளர்ச்சிக்கு உதவுகின்றது

வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து மிக மிக முக்கியம். அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய உதவியாக இருப்பது புரதச்சத்து ஆகும். குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

5. அதிக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்

வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. முக்கியமாக இதனை அவித்து உண்ணும்போது ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சக்தி இன்னும் பெருகுகின்றது. உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிக்கல் செல் அழிவினை ஏற்படாமல் காக்க ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

6. ஆரோக்கியமான சருமம்

வேர்க்கடலையில் அதிக அளவு வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உங்களின் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் இ மிக மிக முக்கியமான ஒன்று.மேலும் ப்ரோடீன் மற்றும் வைட்டமின் இ உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கின்றது.

7. இதய ஆரோக்கியம்

வேர்க்கடலையில் அதிக அளவு நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி உங்கள் இதயத்தினை பாதுகாக்கின்றது. முக்கியமாக இரத்த நாளங்களில் சேரும் கொழுப்புகளை சேராமல் தடுக்கின்றது.

8. புற்று நோய் வராமல் தடுக்கும்

இதில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களுக்கு புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது. தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வரும்போது உங்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்கின்றது.

9. எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது

வேர்க்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.மேலும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது.

10. முடியின் ஆரோக்கியம்

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.

No comments:

Post a Comment