Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 6, 2020

கல்லூரிகள் திறப்பு வழிமுறை வெளியீடு!

நாடு முழுதும், பல்கலை மற்றும் கல்லுாரிகளை திறப்பதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, ஊரடங்கு அமல் படுத்தப்பட்டபோது, பல்கலை, கல்லுாரிகள், மார்ச், 16 முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான, வழிகாட்டு நெறிமுறைகளை, யு.ஜி.சி., நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பல்கலைகள்உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, அந்த நிறுவனங்களின் துணைவேந்தர்கள், தலைவர்களே முடிவு செய்யலாம்.மாநில பல்கலை, கல்லுாரிகளை திறப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் இவற்றை திறக்கலாம். 

நோய்க் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதியில்லை. அதேபோல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்நத மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் அனுமதியில்லை.இறுதியாண்டு மாணவர்கள், நேரடி பயிற்சி பெற, வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment