JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
திருப்பூர் மாவட்டத்தில், 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் இணைய அரசு பள்ளி மாணவர்கள், ஆர்வம் காட்டுகின்றனர்.கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாவட்டம் வாரியாக 'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு பயிற்சி பெற்ற, 119 பேரில், 59 பேர் 'நீட்' தேர்வில் பயிற்சி பெற்றனர்.
இவர்களில், 38 பேர் சமீபத்தில் நடந்த கவுன்சிலிங் மூலம், மருத்துவ படிப்பில் இணைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர் மத்தியில், இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களுக்கு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதுடன், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பால், அரசின் நீட் பயிற்சி மையங்களில் இணைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நடப்பாண்டு, 300 மாணவர்கள் நீட் பயிற்சியில் இணைந்துள்ளனர்.இந்நிலையில், பயிற்சிக்கு புதியதாக இணைந்துள்ள, 300 பேருக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், இன்று ஜெய்வாபாய் பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கல்வி மாவட்ட அலுவலர், பள்ளி தலைமையாசிரியர் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment