Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 20, 2020

தமிழக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு.! மகிழ்ச்சில் அரசு பள்ளி மாணவர்கள்.!

மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம், கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில்,

"7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் உடனடியாக கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. விதிமுறைகளின்படி சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு மாணவர்களை சேர்க்க வேண்டும். பின், முதல்வர் அறிவித்தபடி கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஆனால், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும் ஏழை மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கைவிடும் நிலை வருத்தமளிக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment