Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 8, 2020

ஏராள நன்மைகள் நிறைந்த ஆவாரம் பூ.

"ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" இது பழமொழி. அந்தளவுக்கு ஆயுள் கூட்டும் மருந்து பொருட்கள் ஆவாரையில் நிறைந்திருக்கிறது என்பது தான், இந்த பழமொழி உணர்த்தும் உண்மை.

உயிர்க்கொல்லி நோய்க்கு பயந்து, உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில், இயற்கையின் வழியில், செல்வது தான் உயிர் வாழ ஒரே வழி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில், மூலிகையின் மகிமையை உணரத்துவங்கியிருக்கின்றனர் மக்கள். இந்த வரிசையில், இடம் பெற்றிருப்பது ஆவாரம் பூ. கிராம வழித்தடங்களில், பார்க்குமிடமெல்லாம் தென்படும் ஆவாரம் பூ, சீண்டுவார் இல்லாமல் இருப்பது தான், வேதனை.காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கும்.ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின், குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.

நாள்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூ வேக வைத்த தண்ணீரை, காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் நீங்கும். இந்த தகவல், தற்போதைய சூழலுக்கு உகந்தது என்பது கொசுறு தகவல்.ஆவாரம் பூ சாறு பருகினால், சிறுநீரக தொற்று விரைவில் நீங்கும்.

நிழலில் உலர்த்தப்பட்ட ஆவாரம் பூக்களை, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இதை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுக்குள் வரும்.

இப்படி, வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் பலன்கள் ஏராளம் என்ற நிலையில், காட்சிக்கு மட்டும் என்ற நிலையில், கிராமப்புற சாலைகளில், பயனற்று கிடக்கின்றன. அவற்றை சேகரித்து, மருத்துவ குணம் சார்ந்த பயன்களுக்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு சந்தையை ஏற்படுத்தினால், கிராம பொருளாதாரத்துக்கு கை கொடுக்கும்.

No comments:

Post a Comment