JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய சத்துகளைக் கொண்ட ஏலக்காய் வாசனைப் பொருள் மட்டுமின்றி பல மருத்துவ பலன்களைக் கொடுக்கவல்லது.
► ஏலக்காயில் உள்ள மெலடோனின், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறையும்.
► உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஏலக்காய் டீ, ஏலக்காய் நீரை தொடர்ந்து அருந்திவர நல்ல பலன் கிடைக்கும். இத்துடன் நொறுக்குத் தீனிகளை தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகள் செய்தால் உடல் எடை குறைவது நிச்சயம்.
► மேலும், ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் செரிமானத்தை தூண்டுகிறது. இரவில் தூங்கச் செல்லும் முன் பாலில், சிறிது ஏலக்காய் பொடி சேர்த்துக் குடியுங்கள். செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தீர்க்கும்.
► ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சிறந்த பொருள் ஏலக்காய். மேலும் அனைத்து வித சுவாசக் கோளாறுகளை நீக்கும்.
► குளிர்காலத்தில் பலரும் சளி, இருமலால் அவதிப்படுவர். இதற்கு ஏலக்காய் மிகச்சிறந்த தீர்வு. ஏலக்காயை டீ, பாலில் சேர்த்து குடித்து வரலாம் அல்லது ஏலக்காய் கஷாயம் குடிக்க சளி, இருமல், தொண்டைப் பிரச்னைகள் சரியாகும்.
► தலைசுற்றல், வாந்தி, மயக்கம் இருந்தால் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டுக்கொள்ள சில நிமிடங்களில் பிரச்னை தீர்ந்துவிடும்.
► ஏலக்காயை வாயில் போட்டுக்கொள்வதால் பற்கள், ஈறுகள் வலுவாகும். பல் வலிகளை குணப்படுத்தும். வாய் துர்நாற்றம் இருக்காது.
இதுபோன்ற எண்ணற்ற பலன்கள் கொண்ட ஏலக்காயை சிறிதேனும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment