Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 27, 2020

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை

நீண்டகால வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மூளை இன்றியமையாதது. கற்றல், உழைப்பு முதல் ஆளுமை வளர்ச்சி வரை வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவை மூளையில் கொழுப்பு படிவதை தடுக்க உதவும். கொழுப்பு உணவுகளுக்கு பதிலாக வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அவை முதுமையை தள்ளிப்போடும் தன்மை கொண்டது. போதை மருந்துகளின் பயன்பாடு மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதனை அறவே தவிர்க்க வேண்டும்.

போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். ஆல்கஹால் மூளைக்கு நச்சுத்தன்மை விளைவிக்கக்கூடியது. அதை அதிகமாக உட்கொள்வது மூளை செல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். தினமும் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். குழந்தை பிறந்த முதல் ஐந்தாண்டுகளில் மூளையின் வளர்ச்சி துரிதமாக நடைபெறும்.

அந்த ஆண்டுகளில் பெற்றோர்கள் குழந்தையை அறிவார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது முக்கியம். இது நீண்ட கால வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும். ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடுவது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியமானது.

No comments:

Post a Comment