Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 25, 2020

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் C உணவுகள்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் அதற்கென்று சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதில் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துதான் வைட்டமின் C. ஏனெனில் இந்த வைட்டமின் C ஊட்டச்சத்து நம் உடலில் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்கள் போல செயல்படுகிறது. இது நமது உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இருதய நோய்கள், சரும நோய்கள், மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், கண் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்னைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் C பயன்படுகிறது.

வைட்டமின் C நிறைந்த உணவுகளை, குறிப்பாக குளிர்கால மாதங்களில், நாம் உட்கொள்ளவேண்டும். குளிர்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி, வானிலை காரணமாக பலவீனமடைகிறது. நீங்கள் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் வைட்டமின் C உதவுகிறது.

இருப்பினும், வைட்டமின் C கிடைக்க நீங்கள் அசைவ உணவுகளை உட்கொள்ளத் தேவையில்லை. உங்கள் உடல் ஆற்றலை மீட்டெடுக்க, நோய்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற, குளிர்காலத்தில் வைட்டமின் C நிறைந்த உணவுகளை நாம் அறிந்துகொள்வது முக்கியம். கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் குளிர்காலத்திலும் கிடைக்கும் ஒரு பழம். இது வைட்டமின் C மற்றும் பல ஊட்டச்சத்துக்களால் அதிகம் நிரம்பியுள்ளது. ஒரு கொய்யாவில் 280 சதவீதம் வைட்டமின் C உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீரிழிவைத் தடுக்கவும் கொய்யாப்பழம் சிறந்தது. கொய்யாப்பழம் எளிதாக கிடைக்கக் கூடிய பழம், விலை குறைவான பழம் என்பதால் அனைவரும் வாங்கி சாப்பிட முடியும்.

எனவே குழந்தைகளுக்கு விட்டமின் C பற்றாக்குறை இருந்தால் கொய்யாப்பழம் கொடுங்கள். நாம் மிக சாதாரணமாக நினைத்து ஒதுக்கும் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் C இருக்கிறது. அதோடு மலச்சிக்கல் பிரச்னையையும் தீர்க்க வல்லது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும், சர்க்கரை வியாதி உள்ளவர்களும்கூட இந்த கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம்.

ஆரஞ்சு

ஒரு ஆரஞ்சு பழத்தில் 130% வைட்டமின் C அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை நீங்கள் ஜூஸாக அல்லது சாலட் போன்றவற்றின் மூலம் சாப்பிடலாம். இதனை தினசரி உண்பதன் மூலம் வைட்டமின் சி-யின் அளவை அதிகரித்து உடலுக்கு வலுசேர்க்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் C, E சத்துகள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சியையும் எலும்பு உறுதியையும், இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கும் உதவுகின்றன.

ப்ரோக்கோலி

பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். ப்ரோக்கோலி ஒரு நல்ல கார்ப் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட ஒரு சிறந்த காய்கறி இது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவும்.

உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது. ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலிலுள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றிலுள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது. எனவே ப்ராக்கோலியை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகும். தோல் பளபளப்பாகும்.

பப்பாளி

இந்த பழத்தில் வைட்டமின் C, வைட்டமின் A உடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. பப்பாளியை தினசரி உங்கள் உணவில் சேர்ப்பதால் சைனஸ் பிரச்னைகள், சரும பிரச்னைகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. சருமம் பளபளக்க, எலும்புகளை வலிமையாக்கவும் இது உதவுகிறது. 1 கப் பப்பாளியில் 88.3 மி. கி அளவு விட்டமின் C காணப்படுகிறது. இதில் வைட்டமின் A, போலேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளும் உள்ளன. இது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமல்லாது, ஆண்டின் எல்லா நாட்களிலும் கிடைக்கின்றது. இதன் பலனை நம்முடைய எதிர்ப்பு சக்திக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.

கிவி

கிவி உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டிய இந்த பருவகால பழம், நோய் எதிர்ப்பு சக்தியை உங்களிடம் அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் C அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு 2 கிவி பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் 137.2 மி.கி அளவு வைட்டமின் C சத்தைப் பெறலாம். இந்த பழத்தில் பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. கிவி பழத்தில் எதிர்பாராத அளவு வைட்டமின் C அடங்கியுள்ளது. சாப்பிடுவதற்கு தித்திக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய இப்பழத்தில் வைட்டமின் A, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவையும் அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment