Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 13, 2020

GOOGLE PHOTO'S சேவை இனி இலவசம் இல்லை- அதிரடி அறிவிப்பின் பின்னணி என்ன?

இத்துடன் கூகுள் போட்டோஸில் புதிய கொள்கை ஒன்றையும் அறிவித்திருக்கிறது கூகுள். இரண்டு வருடங்களுக்கு மேல் லாக்-இன் செய்யப்படாமலேயே இருக்கும் கணக்குகளின் டேட்டாவை மொத்தமாக அழித்துவிடுமாம் கூகுள்.

நம்மில் பெரும்பாலானவர்கள் இன்று நம் போனில் ஒரே கேலரி ஆப்பாக வைத்திருப்பது கூகுள் போட்டோஸ்தான். போனில் எடுக்கும் போட்டோ/வீடியோக்களை உயர்தரத்தில் கிளவுட்டில் பேக்-அப் இந்த ஆப் எடுக்க உதவியது. வாங்கும்போதே ஆண்ட்ராய்டு போன்களில் இடம்பெற்றிருக்கும் இந்த ஆப் கடந்த ஐந்து வருடங்களாக அன்லிமிடெட்டாக இந்த சேவையை வழங்கி வருகிறது. இனி அப்படி வழங்கப்படாது என அறிவித்திருக்கிறது கூகுள்.

அடுத்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 15GB வரை மட்டுமே கூகுள் போட்டோஸில் இலவசமாக பேக்-அப் எடுக்க முடியும் என தெரிவித்திருக்கிறது. இந்த 15GB ஸ்டோரேஜ் என்பது கூகுள் ட்ரைவ், கூகுள் டாக்ஸ் என மற்ற சேவைகளுக்கும் பொதுவான ஒன்று. அவையும் கூகுள் போட்டோஸுடன் இந்த இடத்தை எடுத்துக்கொள்ளும். இது 2021 ஜூன் முதல்தான் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன் கூகுள் போட்டோஸில் ஸ்டோர் செய்யப்படும் போட்டோ/வீடியோக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கூகுள் போட்டோஸில் புதிய கொள்கை ஒன்றையும் அறிவித்திருக்கிறது கூகுள். இரண்டு வருடங்களுக்கு மேல் லாக்-இன் செய்யப்படாமலேயே இருக்கும் கணக்குகளின் டேட்டாவை மொத்தமாக அழித்துவிடுமாம் கூகுள்.

ஒரிஜினல் தரத்தில் போடோக்ககளை பேக்-அப் எடுக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டுவருகிறது. இப்போது இது உயர்தர அதாவது 'High quality' போட்டோக்களின் பேக்-அப்பிற்கும் வருகிறது. இதில் போட்டோக்கள் உயர்தரத்தில் கம்ப்ரெஸ் செய்து பதிவேற்றப்படும். கிளவுட் ஸ்டோரேஜ் தீர்ந்துவிடுமோ எனக் கவலைப்பட வேண்டியதும் இல்லை. இதுதான் இந்த ஆப் பெரும்பாலான பேர் முக்கிய காரணம்.

கூகுள் பிக்ஸல் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. அவர்களுக்கு தொடர்ந்து அன்லிமிடெட் 'High Quality' ஸ்டோரேஜ் கூகுள் போட்டோஸில் கிடைக்கும்.

இந்த நேரத்தில் மற்ற எந்த சேவையை விடவும் இலவசமாக அதிக ஸ்டோரேஜ் கொடுப்பது கூகுள் என்பதையும் பதிவுசெய்திருக்கிறது. ஆப்பிள் iCloud 5GBதான் இலவசமாகத் தருகிறது. கூகுள் போட்டோஸை பயன்படுத்தும் 80% பேருக்குக் குறைந்தது முதல் மூன்று ஆண்டுகளுக்காவது 15 GB போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது கூகுள்.

இதற்கேற்றவாறு ஆப்பிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படுமாம். 15GB லிமிட்டை நெருங்கும் போது உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வருவதோடு உங்களிடம் இருக்கும் ஸ்டோரேஜை முடிந்தளவு விரயம் இல்லாமல் பயன்படுத்த வசதிகள் கொடுக்கப்படுமாம். தெளிவில்லாத போட்டோக்கள், ஸ்க்ரீன்ஷாட் போன்றவற்றை மொத்தமாகப் பிரித்து உடனடியாக அழிக்க ஆப்ஷன்ஸ் இருக்கும்..

சரி, ஏன் இந்த மாற்றம்?

பலரையும் அதன் கட்டண கிளவுட் சேவையான 'கூகுள் ஒன்' பக்கம் இழுத்து வரவே கூகுள் இதைச் செய்திருக்கிறது என்கின்றன டெக் வட்டாரங்கள். "ஏற்கெனவே எண்ணற்ற போட்டோக்களும் வீடியோக்களும் கூகுள் போட்டோஸில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து நிலையான சேவையைத் தருவதற்கே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்கிறது கூகுள் தரப்பு.

No comments:

Post a Comment