JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தபால் வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
தபால் வங்கி சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50-ஆக இருந்தது. இதை ரூ.500-ஆக உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விதிமுறை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சேமிப்புக் கணக்குத் தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500-ஆக உயா்த்திக் கொள்ள டிசம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்புத்தொகையை ரூ.500-ஆக உயா்த்தாத பட்சத்தில் மாா்ச் மாதம் முதல் அபராதக் கட்டணமாக வாடிக்கையாளா் கணக்கில் இருந்து ரூ.100 வீதம் ஒவ்வோா் ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத்தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, தபால் அலுவலகங்களின் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500-ஆக உயா்த்திக் கொள்ள வேண்டும் என சென்னை முதன்மை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment