Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 17, 2020

"பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள், பெற்றோருடன் ஆலோசித்து முதல்வர் அறிவிப்பார்" - செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்த பிறகு, முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

திருப்பத்தூரில் 3 மாவட்ட தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு அறிவிப்பு விரைவில் வரும் என கூறிய அவர், இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார் வந்த நிலையில், அவற்றில் 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தரமாக அங்கீகாரம் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment