Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 16, 2020

ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகையை போக்கும் சீரகநீர்

சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய அந்த தண்ணீரை பருகி வருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, நேற்றைய தினம் பார்த்தோம். மேலும் சில நன்மைகளை இன்று பார்ப்போம்.
அது, ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும்.

சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.

கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம். இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது.

அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும்.

சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.

No comments:

Post a Comment