Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 7, 2020

கடந்த மாதம் பழைய ஊதியம் வழங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு: தமிழக அரசு உத்தரவு.

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய விகிதத்தில் பொறியாளர்களுக்கு ரூ10 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரம் வரை ஊதியம் குறைத்து இருப்பதாக தெரிகிறது. 

இந்த நிலையில் கடந்த மாதம் தான் புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக அதற்கேற்ப அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்து கருவூலத்துறைக்கு பட்டியல் அளித்து இருக்க வேண்டும்.

ஆனால், அதை செய்ய தவறியதால் கடந்த நவம்பர் 30ம் தேதி பழைய ஊதியத்தில் சம்பளம் அனைத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில், சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி அனைத்து துறை உயர் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். 

220 துறைகளை சேர்ந்த 52 பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1ம் தேதி நவம்பர் முதல் புதிய ஊதிய விகிதத்தில் தான் சம்பளம் நிர்ணயம் செய்து அனைத்து துறை உயர் அதிகாரிகள் கருவூலத்துறை மற்றும் சம்பளம், கணக்கு அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டன. 

எனினும் புதிய ஊதிய விகிதத்தில் டிசம்பர் மாத ஊதியத்துடன் வழங்கும் வகையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து டிசம்பர் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளளது.

No comments:

Post a Comment