Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 19, 2020

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்கம்

உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று துவங்குகிறது.கல்வியாண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் நலத்திட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

இதில், இலவச சைக்கிள் வழங்குவதும் ஒன்று.நடப்பு கல்வியாண்டில், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு அனுமதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு, எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் நிலையும் உள்ளது. இதனால், அப்போது மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள நலத்திட்ட உதவியாக, சைக்கிள் வினியோகம் மாநில அளவில் துவங்கியுள்ளது.

உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி 16 மற்றும் உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி 5 என மொத்தமாக, 21 பள்ளிகளைச் சேர்ந்த, 2,636 மாணவர்களுக்கு நடப்பாண்டில் சைக்கிள் வழங்கப்பட உள்ளன.முதற்கட்டமாக, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜேந்திரா ரோடு மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தமாக, 100 மாணவர்களுக்கு, இன்று இலவச சைக்கிள், தேஜஸ் ரோட்டரி அரங்கில் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment