Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 5, 2020

பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

முதலில் தேர்தல் வாக்குறுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்த பாஜக, அதன்பின் பின் வாங்கியது. தற்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாது. 

அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என அலட்சியமாக பதில் கூறி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், "நிவா் புயல் வந்த போது முதல்வா் துணைமுதல்வா் மற்றும் அதிகாாிகள் எடுத்த நடவடிக்கையால் எந்தவித பொிய பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சா் உயா் அதிகாாிகள் பாா்வையிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர். 

எங்களது பயணங்கள் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிற அரசாக அதிமுக திகழ்கிறது. அதற்காக நாங்கள் அரும்பணியாற்றிவருகிறோம். நம்பியூா் பேருந்து நிலைய கட்டிடத்தில் முறைகேடு எனக்கூறும் கனிமொழிக்கு பேச தெரியவில்லை. 

எப்படி பேசுவது என்பது தொியாமல் பேசுகிறார். தமிழக அரசை பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பது தான் நிலைப்பாடு. இதுகுறித்து சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சாா்பில் ஒருங்கிணைந்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

கொரோனா தடுப்பு மருந்து பள்ளிக்குழந்தைகளுக்கு முன்னுாிமை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசால் மருந்து எந்தளவுக்கு தயாா் செய்யப்படுகிறது என்ற நிலையை பொறுத்து அதற்கேற்ப மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று பதிலளித்தாா்.

No comments:

Post a Comment