Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 25, 2021

பிளஸ் 2வுக்கு தொடர்ந்து 'ஆன்லைன்' பயிற்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளித்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து திருப்புதல் பயிற்சிகளை, 'ஆன்லைனில்' வழங்க வேண்டும்' என, ஆசிரியர்களை, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நேற்று முன்தினத்துடன் செய்முறை தேர்வுகள் முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவ - மாணவியர் இனி, பள்ளிக்கு வர வேண்டாம். பொது தேர்வுக்கு வந்தால் போதும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.இந்நிலையில், வீட்டில் உள்ள மாணவ - மாணவியருக்கு, தனியார் பள்ளிகள் தொடர் பயிற்சிகளையும், சிறிய அளவிலான தேர்வுகளையும் நடத்தி வருகின்றன. 

ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை விட்டதை போல, தங்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன்படி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டு வேலை நாட்கள் குறைவாகவே உள்ளன. அதிலும், தேர்தலால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.

எனவே, அரசு அறிவிப்பு வரும் வரை, தினமும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். முழு வேலை நாளும் பள்ளி கல்வித்துறை வழங்கும் பணிகளை கவனிக்க வேண்டும்.அரசு அறிவிப்பு வந்து, வீட்டில் இருக்கும் சூழல் ஏற்பட்டாலும், தொடர்ந்து ஆன்லைனில் திருப்புதல் பயிற்சி பாடங்களை, மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.

இந்த ஆண்டு மிக குறைந்த நாட்களே, பிளஸ் 2வுக்கு பாடம் எடுத்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, அவர்களது பொதுத்தேர்வு வரை, பாடங்களை எடுத்து, நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என, மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment