Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 23, 2022

தினமும் 50 கிராம் இந்தக்கடலை சாப்பிட்டால், உங்க ஆயுளில் வருடத்தில் 50 நாள் அதிகரிக்கும்

வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன.

வேர்க்கடலை ஊற வைத்து சாப்பிடுவதை சிலர் தவிர்க்கலாம். ஆனால் அப்படி சாப்பிடச் சொல்வதற்கு பின்னால் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.


வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

ஆனால், வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.

ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் சாப்பிடுகிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.

கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.

எனவே புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.

வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.

தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக்குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒருகைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும்.இத்துடன் சீனி சோக்காத காபி அல்லதுடீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதனால் உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்

No comments:

Post a Comment