Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 21, 2022

வாரத்துக்கு நாலு முட்டை சாப்பிட்டா நீரிழிவு நோய் வராது - பின்லாந்து ஆராய்ச்சி முடிவு

அமெரிக்கர்களின் வீட்டில் முட்டை என்பது பிரதானமானது. அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு சராசரியாக 286 பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது.

நீங்கள் சைவ உணவு உண்பவர் ஆகவோ அல்லது நீங்கள் சைவ உணவுக்கு மாற விரும்புகிறீர்கள் என்றால், முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்



மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது.

அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால்டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.

அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.

அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment