Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 21, 2022

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் தேர்ச்சி என அரசு அறிவித்தது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் லீக் ஆன நிலையில் கண்காணிப்பு பணிக்கு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் இரண்டு முறை தேர்வு எழுத முடியாது. வினாத்தாள் லீக் செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment