ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை தேர்வு: 217 காலியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, September 17, 2022

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை தேர்வு: 217 காலியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியுமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலி பணியிடங்கள்: 217

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

உதவி புள்ளியியல் ஆய்வாளர் - 211

சம்பள ஏற்ற முறை: ரூ. 20,600-75,900 (நிலை: 10)

கணக்கிடுபவர்: 5

சம்பள ஏற்ற முறை: ரூ. 19,500-71,900/ (நிலை:8)

புள்ளியியல் தொகுப்பாளர்: 1

சம்பள ஏற்ற முறை: ரூ. 19,500-71,900/ (நிலை:8)

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை நாள்: 15.09.2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 14.10.2022

எழுத்துத் தேர்வு நடைபெறு நாள்: 29.01.2023

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பின்வரும் அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தெரிவு முறை:


இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு நடைபெறும். முதல் தாளில் புள்ளியியல், கணிதவியல் ஆகிய பாடங்களின் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். 200 கொள்குறி வகை இடம்பெறும்.

இரண்டாம் தாளில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனாய்வுத் தேர்வு இடம்பெறும்.

இந்த எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

www.tnpsc.gov.in/www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad